இயந்திரமாக வாழ்க்கை சுற்றி சுழல்கிறது ..
முன்பொரு காலத்தில் , வானளாவி நின்ற தெண்ணைமர ,
இளநீருக்க ஏங்கி கொண்டிருந்த தருவாயில் ,
மனம் தெளிந்திருக்க வாய்ப்பில்லை ..,,
பரபரப்புடன் , அரைவேக்காடாய் வந்து சேரும் பிஸ்ஸாவிற்காக ,
ஒரு நல காத்திருப்போம் என்று !!
காலம் ..
மனிதனுள் எத்தனை மாற்றங்களை திணிக்கிறது..
கைநிறைந்த கண்ணாடி வளையலின் சப்தம் ,
கார்போரேட் கல்சரினுள் ஒடுங்கி விழும் மாயம் இன்று !!
வீட்டின் நடுமுட்ரத்தில் , கயிற்ருக்கட்டிலில் ,
கால் நீட்டி , நிமதியாய் உறங்கி எழுந்த சுகம் ..
கடல் போன்ற வீடிருந்தும் கிடைப்பதில்லை ..
பதட்டம் நிறைந்த சூழலின் இடையே ..
உறவுகளும் சிறு புள்ளியாய் மட்டும் ,,
எங்கோ ஓர் மூலையில் , தள்ளப்பட்டிருக்கும் ...
நிஜ மனித சந்தோஷம் கரைந்திடும் சத்தத்திற்கு முன்பு ..
போலி கௌவ்ரவமும் உடைந்து தள்ளப்படும் , என்றாவது ஓர் நாள் ..
ஓர் வாழ்கை ..
கண் சிமிட்டும் நேரம் , களைந்து விடும் ..
கலைந்த பின் கரைவதெதற்கு?!
No comments:
Post a Comment