விடியல்
சுதந்திரம்,,
ஆறெழுத்துசசொல்....
விதையாய் அன்று விதைக்கப்பட்டு...
இன்று,,
ஆயிரம் கிளை கொண்ட மரமாய் நிற்கிறது...
விழியில் ஏக்கமும், தோள்களில் துணிச்சலை தாங்கி,,
உதைவாங்கி, உதிரம்சிந்தி ,உயிர் கொடுத்து,,
ஆயிரமாண்டு, வெள்ளையனிடம் போராடின,
காலமும் காரணமும்......
நம்நாடு நமக்கென்ற உரிமைக்குரலுக்காக...
இன்றந்த குரல், ஒடுங்கி வீழ்கிறது....
ஒவ்வொரு நாளும்,
சாலையோரம், கைவிடப்பட்டு,வாழ்க்கை முடியும் நாட்களை,,
எண்ணி வாழும்,எழுபது வயது முதியவனுகும் சென்றடைவதில்லை...
இந்த அறுபது வருட சுதந்திர சந்தோஷம்...
அணிய ஆடையில்லா, ஆறுவயது குழந்தையையும் சேர்வதில்லை...
சுதந்திரம்...
வருமையின்பிடியில் இருந்து விடைபெற போரடுபவனுக்கு ஓர் விடியல் ...
விடிந்த பொழுதினை செலவிட தெரியாதவனுக்கு வெறும் வார்த்தை !!
No comments:
Post a Comment