நீ யார் என்று தெரியவில்லை ...
உன் முகமோ நினைவில்லை ..
உலகமோ உனக்கென்று கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறது...
மதி இழந்த,, சீர்கெட்ட சமுதாயமடி இது...
வலியால் துடித்த பொழுது ஒதுங்கிய கண்கள்..
பெட்டிக்குள் திரும்பிய உன்னை கண்ட பின்பு கரைகிறது...
வேதனையோடு வெட்க்கி தலை குணிகிறேன்..
கனவுகள் பல கொண்ட உன்னை...
கசைந்த மிருகங்கள் மத்தியில் வாழ விரும்பாத நீ...
விட்டு சென்றது...
புரட்சியும்.. குரல் மிகுந்த எழுச்சியும்... !!
No comments:
Post a Comment