Tuesday, November 13, 2012




தீபாவளி ...

காலங்கள்  பின்  சென்ற  நினைவுகள் ..
மனதின்  ஓரம்  இனம்  புரியாத  உணர்வு ..

புத்தாடை  உடுத்தி  புகை  படத்திற்கென்று ,
செலவழிந்த  நாட்கள்  அன்று ...

அதிகாலை  ஓர்  மாறுதலாக , சேவல் தனை  எழுப்பி ,
சரமாக  வெடித்து  புகை  மண்டலம்  உருவாக்கிய  உத்வேகம் ..

தற்பொழுதோ , ஐந்து  நிமிடம்  தூக்கத்திற்காக  அலைகிறோம் ..
தீபாவளி ,இயந்திரமான  வாழ்கைக்கு  இடையே  குறுக்கிட்ட
ஒரு  நாள்  சொர்க்கம் ..

தொலை  பேசிகளில்  வாழ்த்துக்களும்  கசந்து  விட்டன ..
வீதியின்  ஓரத்தில்   பட்டாசு  காகிதங்கள்  படரவில்லை ..

கம்பி  மதப்புகளும்  இனி  வீணென்று   தோன்ற  மாறுதல்களின் ,
இடையே  வாழ்கை   சிக்கி  கொண்டு  திண்டாடுகிறது ..

உணகென்று ஒன்று  எனக்கென்று  ஒன்று  என்று  பட்டாசுகள்  பிரித்தெடுத்து
வைத்து   கொண்ட  சகோதர  சண்டைகள்    நினைவுகளாக  மட்டும்  நிற்கிறது ..

உணகென்று  நான்  செய்ததென்ற   பலகாரங்கள்  உறங்குகின்றன ..
காலை  திறந்த  கறி கடை  மட்டும்  கலை  கட்டி  இருக்கிறது ..

வீடெங்கும்  நண்பர்களின்  கூட்டம்  கண்ட  தீபாவளி ..
நான்  வந்த  பினும்  வெறிச்சென்று  இருபதேன்   என்ற  கேள்வி  எழுப்பும்  பொழுது ..


ஒரு   நிமிடம்  தோன்றுகிறது ...
தீபாவளி ..
மற்றவை போல்..
இனி நீயும் ஒரு பண்டிகை தான் ..



No comments:

Post a Comment