உனக்கென வழக்காடு ,இனியும் வாழ வைத்தால்
அடையாளம் இழப்பாய்,அதிகாரம் விரட்டும் உன்னை !
உடமை இழந்தாய் , உணர்வையும் இழந்தாய்
இனியும் பணிந்தால் உரிமையும் இழப்பாய் ..
இழக்காதே , உன் அடையாளத்தை ..
மண்ணில் வீழ்வாய் எனினும் , விதையாய் விதைந்து விடு தமிழா ,
வேர்களாய் புதியதொரு தலைமுறை பிறக்கட்டுமே ..
கிளைகளாய் நல்லதொரு விடியலும் படருமே.
விதியென்று ஒன்றும் இல்லை தமிழா ,நாளை
உன் சந்ததிகள் ,அகதிகளாய் மாறாது நிற்க ,
வழியொன்று கண்டுவிடுவாய் .
ஏறொன்று தழுவி வந்தாய் தமிழா
உன் வீரத்தின் அழகுதனை கொலைத்திடலாமோ !
குனிந்து கூனுற்றையே தமிழா நிமிர்ந்து
நேர்பட பாரடா ,நீ யாரென்று உலகம்
அடையாளம் கண்டுகொள்ளும் ..
பசியாற்றிய கையும் , கொடுத்தே பழகிய நெஞ்சமும் இனியும் சிலகாலம் ஓய்வுறட்டும்
தமிழா , உன் அருமை ஒன்றும் மொட்டல்ல ,
ஆணிவேராய் நிர்க்கும் ஆலமரமல்லவா ?!
குருதியும் கொதிக்கிறது தமிழா,
கைகள் கட்டுண்டு கிடக்கிறோம் ,பழியும்
துரோகமும் முதுகை பிளக்கின்ற வரையில் ,
வேடிக்கை பார்க்காதே தமிழா, விழித்தெழு ..
நாளை உனதென்ற நம்பிக்கை கொள்வாய் , இனி
நாமும் யாரென்று உரக்க சொல்லும் தருணம் இது
போராடி வெல்வாய் ,போர்க்களம் நமக்கொன்றும் புதிதல்ல ..
ஒன்றுபட நிற்பாய் , நமக்கு நாமே என்று !
No comments:
Post a Comment