Tuesday, March 6, 2012

பெண் ,
      ஏழு  பருவங்கள்  கடக்கும்  முன்
      ஏழேழு  ஜென்மம்  பிறக்கின்றாள் ..
      இவள்  பூவிற்கும்  உவமை  ஆகிறாள் ..
      பின்  புயலுக்கும்  பெயராகிறாள் ...
    
      பேதை  எனும்  பருவம்  ஒன்று  கண்டு ..
      மொட்டு  விட்ட  முதல்  பூவாய்  ..
      மழலை  மொழியால் , இம்மண்ணிற்கு   மணம் சேர்க்கையில் ..
      கள்ளி  பாலும் ,இவளுக்கென்று  காத்திருக்க ..
      முலையில்  கிள்ள   படாது  போக .. பிழைத்தெழுகிறாள்..
  
      பெதும்பை  எனும்  பருவம்  மற்றொன்றம் ..
      பூமியின்  முதல்  மழை  வாசம்  போல்
      எழுதிடா  வெள்ளை  காகிதமாய் ..
      மாசற்ற  முத்தொன்று  கண்டெடுத்தார்  போல் ..
      சிரிப்பென்னும்  சிந்தை  மட்டும்  கொண்டு ..
      வாழ்கை   தொடங்குகிறாள் ..
    
      மங்கை  எனும்  மூன்றாம்  பருவம் ..
      மயில்  போல்  தோகை விரித்து  மகிழ்ந்தாடுவாள் ..
      இளங்கன்று  ஒன்று  போல்  பயம்  அறியாது ..
      சின்னஞ்சிறிய  வண்ணத்து பூச்சி  இவளென்று ..
      வானம்  தன்னதென்று  சிறகை  விரிதிடுவாள் ..

      மடந்தை , மன  திண்மை  என்றிடவோ ..
      புதிதாய்  மலர்ந்த  பூவின்னது  பனித்துளி  என்றிடவோ ..
      தூய்மை  என்ற  சொல்  ஒன்றிற்கு  பெண்மை  என்று  பெயர்   சூட்டவோ ..
      கரம்  இரண்டில்  இவ்வுலகை  ஏந்தும்  திறம்  கொண்டிடுவாள்   ..
      எட்டா  நிலவை  தொட்டு  வெற்றி  எமதென்றிடுவாள்
    
      அறிவை , என்றும்  தெளிந்த  நல்லறிவை  நாடி ...
     தீங்கென்று  ஒருவர்க்கும்  கருதாது...
     அறியாமை   எனும்  இருள்  சூழ்ந்த  உலகை ..
     தன  ஆற்றலால்  காலை  எழுந்திடும்  கதிரவன்  போல் ..
     எங்கும்   படர  செய்திடுவாள்  அறிவொளியை ...

     தெரிவை ,
     பிறந்ததோ  ஓரிடம் , புகுந்ததோ   ஓரிடம் ..
     பெற்றெடுத்த  அன்னை  விலகி  கண்டிடுவாள்  புதிய    முகம் ..
     ஈரைந்து  மாதம்  கரு  சுமந்து ,பிழைத்தெழுவாள் மறுஜென்மம் ..
     திகட்டுமே  தேனும்  சில நேரம் ..
     திகட்டாது இவள்  அன்பினால்  மற்றோர்  வாழ்வும் ...
  
    பேரிளம்  பெண் ,
              காலம்  கடந்ததெனினும்,
             குடும்பம்  மொத்தம்  கண்ணில்   சுமந்து
              என்றும் ,வழி  தவறா  பாதை  பதித்து ..
              கடமை  என்ற   கடலின்  ஆழம்  புரிந்து ..
              வாழ்வின்  அர்த்தம்  தெளிந்து  கரை  சேர்ந்திடுவாள்  ..
    

1 comment:

  1. அருமையான பதிவு!!! மிக கச்சிதமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து , மிக அழகாக வடிவமைக்க பட்டுள்ளது.. இந்த பணி மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!! :) :) :)

    ReplyDelete